Published on 07/05/2022 | Edited on 07/05/2022
![Heavy rain warning for 16 districts ... Meteorological Center announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ulEC2rIXsLsGQj-ggNGGjU9lTKh6ojBIhjq83cqFHs/1651927410/sites/default/files/inline-images/4574_0.jpg)
தமிழகத்தில் வரும் மே 9 ஆம் தேதியன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வரும் ஞாயிற்றுக் கிழமை புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் மே 8 ஆம் தேதி ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பொழியும். வரும் 9 ஆம் தேதி புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. மே 8 ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸை தாண்டலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.