Skip to main content

தாறுமாறாக ஓடிய பேருந்து; தூக்கி வீசப்பட்ட பெண் பயணி!

Published on 18/02/2025 | Edited on 18/02/2025
Bus runs erratically; female passenger thrown out!

மது போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநர். பெண் பயணிகள் தூக்கி வீசப்படும் பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் இருந்து பாகாயம் வரை இயக்கப்படும் தனியார் பேருந்து  இரவு வேலூர் மக்கான் பகுதி வேலூர் வடக்கு காவல் நிலையம் எதிரே செல்லும் போது தாறுமாறாக ஓடி சாலையோரம் ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர் மற்றும் சாலை ஓரம் இருந்தவர்கள், நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனங்கள் மோதியது. 

இதில் 3 கார், ஒரு ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்கள் சேதம் ஆகியுள்ளது. இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி கட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய உசூர் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ரவிசுந்தர் (34) மது போதையில் பேருந்து தாறுமாறாக இயக்கியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பேருந்து ஓட்டுனர் ரவி சுந்தர் வேலூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சேதமடைந்த வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் பொதுமக்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்