Dear Readers,
Nakkheeran Gopal was born on 10th April 1959 at Aruppukottai, Virudhunagar District.His mother Rajamanickammal was a homemaker. His Father S.Ramanathan is a retired lower grade employee in Tamilnadu Highways Department. Rajagopal, as named by his parents is the second eldest of four siblings.
He completed his school education at Municipal School of Aruppukottai & SBK Higher Secondary School. After clearing Pre-University course at Devanga Arts College, he graduated as Bachelor of Commerce from SBK College in 1977. Apart from academics, he was part of his college hockey team and also involved in art works that could be considered as one of the early signs of a contemporary layout artist and editor.
Post degree, Rajagopal's father wanted him to be employed in a bank. Rather than being idle expecting for a bank profession, Gopal worked in a provisional store much to his father’s displeasure. In 1978, his relative promised him of a job in then Madras however that could not be fulfilled later but eyeing, which Rajagopal had moved into capital city initially.
Finally Rajagopal managed to find a job in the Butterfly Company at Washermanpet. His first day work experience was a memorable infact an inspiring incident. He was introduced to man who appeared untidy and cleaning a material also assigned Rajagopal to do the same. Being clean in attire and high in dreams, just like any other graduate he felt highly disappointed and embarrassed to take over that. Meanwhile, Rajagopal was surprised to see that man off the untidy attire leaving the factory in a Benz car. Moreover the same man was the owner of the firm too. This incident had made a huge impact in him. Rajagopal believed that "Sincerity & Dedication towards profession can bring Success & Glory”.
In 1983 Rajagopal and his friend jointly started a rubber firm investing around 3000 rupees. Things were not proceeding well from the beginning. Inspite of being exhausted for the whole day they could just manage one single meal everyday. Somedays they might even need to cycle all around the city. This brought unpleasant effects to Rajagopal’s health and so he had returned back to his native. He abstained from work for almost four months to recover completely but improved his artistic skills during this timeframe. His friends and neighbours suggested him to seek a relevant job that would display his splendid artworks.
In 1985,Rajagopal was rightly identified by Mr.Valampuri John, the Editor of THAI magazine run by the then Chief Minister M.G.Ramachandran. He gained lot of knowledge on layout work supported by the encouraging Editor. He also got exposed to production work during his venture in THIRAICHUVAI. However Rajagopal had learnt the success story when he acted as a layout director in THARASU magazine. The readers loved the wrapper layout work that sensibly portrayed the message.At this stage,he opted to move out of THARASU due to various conflicts.
Rajagopal,with sum of four thousand rupees aggressively decided to start his own political investigative weekly magazine in 1988.He loved the epic title Nakkheeran but it was possessed by a politician named Mr.Subbu. When approached, Mr.Subbu generously gave away the title that led to the evolution of “Nakkheeran” the weekly tamil magazine.The material suppliers offered fund for 4-10 weeks positively.The office was setup in a small room at Kilpauk on the banks of river Coovam. The first ever issue of Nakkheeran successfully came out on April 20th.
Nakkheeran did a opinion poll survey across the state during Tamilnadu general election that held in 1989. People raised their eyebrows when the election results were out to match 90% of Nakkheeran’s predictions. No wonder that Nakkheeran earned more than hundred thousand readers within a year.Nakkheeran continued to be smart by bringing out inside news from political arena. The magazine have never been reluctant to lime light political scams. Some of the major issues aggressively covered were about gruesome murderer ‘auto’ Shankar, disgraced but self claimed spiritual guru Nithyanandha,Vachathi tribes harassment by Police force etc.,
Nakkheeran’s history would remain incomplete without forest brigand Veerapan’s chapter. Needless to say that the magazine took a culminating path since its decision to take over Veerapan’s issue fearlessly. Sivasubramaniam, the reporter of Erode district was the first media person to snap a picture of never seen Veerapan. Furthermore, Nakkheeran Gopal accompanied by Sivasubramaniam went on to meet Veerapan in dense forest was a real sensation at that time.Nakkheeran Gopal had been sent officially by Tamilnadu Government to rescue nine forest rangers abducted by Veerpan in 1995. The entire nation went spine-chilled when Veerapan took Karnataka filmstar Rajkumar as a hostage in the borders of Thalavadi forest. The editor and his team effectively acted as an emissary between brigade and state governments to carry out a successful mission in rescuing thespian Rajkumar that calmed down the insecure atmosphere prevailed between two states since abduction.
Nakkheeran is known for its bravery in rightly criticising the Government.The defamation cases against Nakkheeran never stop.The magazine have been spending huge sum of money for the legal battle. Nakkheeran have never compromised their stand inspite of continous tortures incurred through various forms. # to be revisited.
Nakkheeran Gopal was given Justice Krishna Iyer Award and also recogonized among the ten indian icons in 2003 . On top of all, The state government honoured Nakkheeran Gopal with the most prestigious PERIYAR award in 2010.
Nakkheeran has been reluctant to be silent over the past 25 years. Strongly,It will continue to do so
மனிதர்களில் பெரும்பாலோனவர்கள் தங்களின் உன்னதமான எண்ணங்களையும் லட்சியங்களையும் அடைய முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள். மனித வாழ்வியலில் இது ஒரு புதிராகவே உள்ளது. சில உயர்ந்த கருத்துக்களை மற்றவர்களுக்கு போதிப்பவர்கள் அதன்படி தாங்கள் நடந்து கொள்வதில்லை. தான் போதிப்பதற்கு எதிராக தானே நடந்து கொள்வது பொது வாழ்வில் அதிகம்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.
""வாய்மையே செல்லும்'' என்ற மந்திரத்தை நிலைநாட்டிய உயர்ந்த மனிதர் நக்கீரன் கோபால். எந்த பின்புலமும் பாதுகாப்பும் இல்லாமல் விடாப்பிடியாக தனிமையில் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி வெற்றிபெற்ற இவரது சரித்திரம் தனித்துவம் வாய்ந்தது.
""யுத்தம்'' என்ற புத்தகம் அவரைப் போன்ற போராளிகளுக்கு ஒரு முன்மாதிரிப் பாடமாகவும் இனிவரும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் அமையும்.
தனது உயிரைப் பணயம் வைத்து பல தீரச் செயல்கள் செய்தது மட்டுமின்றி தனது அனுபவங்களையும் சத்திய சோதனைகளையும் புத்தகமாக வெளிக் கொண்டு வந்துள்ள நக்கீரன் கோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அக்டோபர் 11, 2010
"நக்கீரன் கோபாலை என்ன செய்யப் போகிறீர்கள்? ஏன் ஒரு வழக்கு மாற்றி ஒரு வழக்கை கையில் எடுக்கிறீர்கள்? உண்மையில் அவர் மீது என்ன வழக்கு உள்ளது? நக்கீரன் கோபாலுக்கு ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது''.
""ராஜ்குமார் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் வந்தபோது, நக்கீரன் கோபால் இந்த வழக்கிலேயே இல்லை என்று சொன்னீர்கள். நான் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டேன். 6 மாதம் கழித்து வழக்கில் அவரை சேர்த்தீர்கள். இந்த வழக்குகள் பற்றி நான் ஏற்கனவே நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன்.
வீரப்பன் விஷயத்தில் என்ன நடந்திருக் கிறது? பல கோடி ரூபாய் செலவானதுதான் மிச்சம். மாநில மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது. வீரப்பன் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இதுவரை வந்தபாடில்லை. வீரப்பன் வழக்குகளுக்காக நிறைய பணமும் நிறைய ஆற்றலும் நிறைய நேரமும்தான் வீணாகிறது.
தமிழகம், கர்நாடகம் என இரண்டு அரசுகளும் சேர்ந்து பல உறுதிமொழிகளைக் கொடுத்துதான் நக்கீரன் கோபாலை காட்டுக்கு அனுப்பி, கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டன. பிறகு சூழ்நிலைகள் மாறியதும் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளை மீறுவது சரியல்ல. ஒருமுறை தியாகியாக இருந்தவர், இப்போது துரோகியா?
அன்றைக்கு அவர் அரசு தூதராக சென்ற தால் ராஜ்குமார் மீட்கப்பட்டார். இன்றைக்கு கடத்தப்பட்ட அந்த அரசியல்வாதி... ... யார் அவர்?''
-நீதியரசர் கனகராஜ் கேட்டதும், நாகப்பா என்று நமது வழக்கறிஞர் தெரிவித்தார்.
""ஆம்.. நாகப்பா இன்றைக்கு படுகொலை செய்யப்பட்டி ருக்கிறார். இதற்கு யார் பொறுப்பு? அரசியல் சூழ்நிலைகள் மாறலாம். சட்ட அமைப்புகள், நீதிபதி, கடவுள் இவையெல் லாம் அரசியலுக்குத் தக்கபடி மாறுவதில்லை. சில அதிகாரிகள் தவறான தகவல்களை அரசின் தலைமைக்கு தந்து வருகிறார்களோ என்று கருதத் தோன்றுகிறது.
இந்த வழக்கில் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் தாக்கல் செய்ய வேண்டிய பேப்பர்கள் நிறைய இருப்பதாகவும் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். ஆனால், கடைசியில் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் வரும். அவரைக் கைது செய்தாலும் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. He is an empty handed man. பாவம் அந்த நிருபர்களும் நிறைய அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட தேவையற்ற தொல்லைகளை நக்கீரன் கோபாலுக்கு ஏன் தந்து கொண்டிருக்கிறீர்கள்? இதன் மூலம் நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்? ஒன்றுமேயில்லாமல் பத்திரிகையாளர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இது, மிகவும் வருந்தத்தக்கது. உங்கள் கௌரவப் பிரச்சினைகளை கீழே போடுங்கள். இதை ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் பார்க் காதீர்கள். தன் கடமையைச் செய்த பத்திரிகையாளரை துன் புறுத்தாதீர்கள். எப்படி பார்த்தாலும் அவர் தன் கடமையைத் தான் செய்திருக்கிறார். இப்படி பொதுநலனுக்காக பாடுபட முன்வருபவர்களை நீங்கள் தொந்தரவு செய்தால்… இனி யார் நல்ல காரியங்களுக்கு முன்வருவார்கள்?
அரசியல் சூழ்நிலைகள் மாற்றங்களுக்கு ஏற்ப எங்களுடைய தரத்தை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது. சட்டமோ நீதிபதியோ இப்படியெல்லாம் நிறம் மாற முடியாது. மனிதர்கள் வரலாம் போகலாம். சட்டம் என்றுமே மாறாது.
உங்கள் உள்துறைச் செயலாளர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் அடங்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்து, நக்கீரன் கோபால் மீதான வழக்குகள் குறித்தும் அவர் மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இதற்கு என்ன தீர்வு என்பது குறித்தும் விவாதித்து முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும்.''
(ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நமது முன்ஜாமீன் மனுவை விசாரித்து, உத்தரவு வழங்கிய நீதியரசர் கனகராஜ், அப்போதைய ஜெ. அரசின் அரசு வழக்கறிஞரைப் பார்த்து ஓப்பன் கோர்ட்டில் கடுங்கோபத்துடன் கூறிய வார்த்தைகள்.)
""சேலஞ்ச்'' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்த சமயத்திலே உடன் வாசித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டு, பிரமிப்பில் உறைந்துவிட்டேன். விறுவிறுப்பான மொழி நடை. புதிர்களைப் போட்டு அவிழ்க்கிற மாதிரியான சம்பவங்களின் தொடர் அடுக்குகள். வாசிக்கத் துவங்கியவரை கட்டியிழுத்து சுழற்றி வீசுகிற மொழி வசீகரம். அதை விடவும் முக்கியமானது மிகப் பெரிய அரசதிகார ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் பத்திரிகையையும், பத்திரிகைத் தர்மத்தையும், கருத்துரிமையையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படுகிற மன வைராக்யமிருந்த போராட்டங்கள்.
இப்போது ""சேலஞ்ச்-2''வாக "யுத்தம்' என்ற தலைப்பில் நக்கீரன்கோபால் எழுதுகிற கட்டுரைத்தொடர். சமூக நீதி விருது அவருக்கு கிடைத்திருப்பது எத்தனை பொருத்தமானது என்பதற்கான சாட்சியமாக வருகிறது இத் தொடர்.
சிவாவின் கைதா, கடத்தலா அல்லது இரண்டுமா என்று இனம் புரியாத மர்மப் புதிருடன் துவங்குகிற தொடர், அதே பரபரப் புடன் விறுவிறுப்புடன் நகர்கிறது. வாசகர்களை கட்டியிழுத்துச் செல்கிற புயற்சுழலாக வேகம் காட்டுகிறது.
ஆனால், இது கதையல்ல, சுவாரஸ்யத்துக்குரிய கற்பனைக் கதையல்ல, வலிகள் நிறைந்த சத்திய நிகழ்வுகள். கொடூர வன்மத்தின் கரத்தில் வலிய அரசதிகாரமும் இருந்தால், தர்மமும் நீதியும் என்ன கதிக்குள்ளாகும் என்கிற அவலத்தையும் ஆவேசத்தையும் உணர்த்துகிறது.
காவிரி நதிநீர்ப் பகிர்வில் ஆண்டுதோறும் காயப்படுகிற கர்நாடக-தமிழக மக்களின் உறவு, ஒரேயடியாக வெட்குண்டு பெருஞ்சேதத்துக்கும் பெருநாசத்துக்கும் ஆளாகிற அவலச் சூழல். இரு மாநிலங்களிலும் பெரும் கலவரங்கள் மூழ்கிற அபாயம்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திக் கொண்டு சென்று விட்ட கன்னட திரைப்பட முன்னோடி நடிகர் ராஜ்குமாரை மீட்பது யார் என்ற கேள்வி, இரு மாநிலங்களையும் திணறடித்த தருணத்தில்- தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், ரஜினிகாந்த் போன்றோரின் கெஞ்சுதலான வேண்டுகோளுக்கேற்ப... பத்திரிகையாளனுக்குரிய சமுதாய அக்கறையுடனும், தேசப்பற்றுடனும், மனிதநேயத்துடனும் நக்கீரன்கோபால் மீட்புப் பணியில் ஈடுபட்டு மகத்தான வெற்றி பெற்று நாடே மகிழ்ந்து அவரைக் கொண்டாடியது.
தேசமே எழுந்து போற்றிப் புகழ்ந்து கொண்டாடப்பட்ட ஒரு நற்பணியை குற்றமென கருதுகிறது. மாறிவிட்ட தமிழக அரசு, தண்டிக்க விரும்புகிறது. எதைச் சொல்லி தண்டிப்பது?
தண்டிப்பது என்று அரசதிகாரம் முடிவு செய்தபிறகு, காரணங்களைப் புனைவது பெரிய விஷயமா?
சிவா கடத்தலுடன் தொடங்குகிற இக்கட்டுரைத் தொடர் அந்தப் புனைவையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நக்கீரன் நடத்துகிற போராட்டம். தம்மைத் தாமே மீட்பதற்கான போராட்டம், பத்திரிகை உரிமை, கருத்துரிமை, மனித உரிமை மீட்புக்கான போராட்டமாகவும் திகழ்கிறது.
ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிகை உரிமைக்கு நேர்கிற ஆபத்துகளையும், தாக்குதல்களையும் முறியடிக்க "இந்து' ராம் உள்ளிட்ட அனைத்து பத்திரிகையாளர்களும், ஜனநாயக அக்கறையுள்ள வழக்கறிஞர்களும், தீக்கதிர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களும் போராடுகிற தருணத்தில், துக்ளக் ஆசிரியரின் அபஸ்வரம்.
கருங்காலித்தனம் கோழைத்தனத்தின் செயல். இது எந்த தர்மப் போராட்டத்தையும், தோற்கடிக்க முடிந்ததில்லை. மாறாக வரலாற்றில் மிகப்பெரிய இழிவையும், பழியையும் ஏற்கும்.
யுத்தம்... கட்டுரைத் தொடர், அரச பயங்கரவாதத்திற் கெதிராக தர்ம பலத்துடன் பத்திரிகையாளர்கள் நடத்திய குருஷேத்திரப்போரை அதற்கேயுரிய உயிர்த் துடிப்பான பரபரப்புடன் சித்தரிக்கிறது.
நக்கீரன்கோபாலின் அணுகுமுறையும், தம் பத்திரிகை ஊழியர்களை தோழர்களாக- குடும்ப உறவாக- மதித்துப் போற்றி, காப்பாற்றத் துடிக்கிற தோழமைப் பண்பையும் உணர முடிகிறது.
தமிழர்களின் மனசாட்சியைப் பற்றி உலுக்குகிற கடந்தகால, தமிழகக் கறைபடிந்த அடக்குமுறை தர்பார், தொடரின் மூலம் அம்பலமாகிறது. வரலாற்று ஆவணமாகிறது.
வாழ்த்துக்கள்!
மேலாண் மறைநாடு
626 127