செயல்படுத்திய திட்டங்கள்!
1991-1996 உசிலம்பட்டி, தர்மபுரி பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடூரம் சர்வசாதாரணமாக நடந்தது. இதைத் தடுப்பதற்காகவும் பெண் குழந்தைகளைக் காப்பதற்காகவும் தொட்டில் குழந்தைத் திட்டம்.
காவல்துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அனைத்து மகளிர் காவல்நிலையங்கள். நேரு உள்விளையாட்டு அரங்கம் உலகத்தரத்தில் நவீனமாக்கப்பட்டது.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியை சென்னையிலும் உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சையிலும் நடத்தினார் ஜெயலலிதா.
2001-2006: பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கோவில்களில் அன்னதானம், கட்டாய மழை நீர் சேகரிப்புத்திட்டம், புதிய வீராணம் திட்டம்.
2011-2016: மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில், அம்மா மருந்தகம், சமுதாய வளைகாப்புத்திட்டம், பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் பெட்டகத்திட்டம்.
மக்கள் விரோத சட்டங்கள்!
தடா சட்டத்தின் கீழ் தி.மு.க.வின் முன்னணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன், வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரன் ஆகியோர் 1992, ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர். 10 மாத சிறைவாசத்துக்குப் பின் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
2001-2006 ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்தார். மக்கள் நலப்பணி யாளர்கள், சாலைப் பணியாளர்களை வேலையிலி ருந்து டிஸ்மிஸ் செய்தார். கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை, மதமாற்றத் தடைச்சட்டம்.
பொடா சட்டத்தின் கீழ் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டு கொடுஞ் சிறைவாசம் அனுபவித்தார். இந்திய அளவில் பொடா சட்டத் தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகை யாளர் நக்கீரன் ஆசிரியர்தான். நக்கீரன் நிருபர் கள் சிவசுப்பிரமணியன், சுப்பு, மகரன் ஆகியோ ரும் கைது செய்யப்பட்டனர்.
பொடா சட்டப்பிரிவின் கீழ் வைகோ, சுப.வீரபாண்டியன், பழ.நெடுமாறன், ஷாகுல் ஹமீது, தாயப்பன், கணேசமூர்த்தி உள் ளிட்டோரும் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறைப்பட்டனர்.