










Published on 18/02/2025 | Edited on 20/02/2025
ஒன்றிய அரசின் கட்டாய இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக தி.மு.கவின் கூட்டணி கட்சிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் திராவிட கழகத் தலைவர். கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, வைகோ, தொல். திருமாவளவன், தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், வேல்முருகன், அப்துல் சமத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினர். இறுதியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கண்டன உரையாற்றினார்.