
கிராமங்களில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி: ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு பவுன் தங்க நகை கொள்ளை. தொடரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள S.கொளத்தூர் மற்றும் தேவபாண்டலம் ஆகிய கிராமங்களில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆறு வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் S.கொளத்தூர் கிராமத்தில் ஐந்து வீடுகளில் நள்ளிரவில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் அரசு பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த வாழ்க வளமுடன் அறக்கட்டளை உரிமையாளர் ஸ்ரீராம், கள்ளக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன், செல்வி அமுதா சுமதி ஆகியோர் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அரசு பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் வீட்டில் மட்டும் ஒரு பவுன் நகை பணம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் மீதமுள்ள ஐந்து வீடுகளில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோ மற்றும் லாக்கர் உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்,மேலும் சம்பவ குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.