அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை வழங்கி வருகின்றன. சென்னையைச் சேர்ந்த எவரெஸ்ட் NGO நிறுவனம் பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கிராமப்புற கல்வி மையம், இலவச கணினி பயிற்சி, மென்திறன் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல சேவைகளை செய்துவருகிறது. தற்போது இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்குப்படுவதற்கான செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. வருடத்திற்கு ரூ.30,000 வீதம் இளங்கலை படிப்பைத் தொடரவிருக்கும் 100 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பதிவுசெய்வதற்கான கடைசி நாள் 20 ஜுன் 2018.
அடிப்படைத் தகுதிகள்:
- சென்னையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- 12ம் வகுப்பை அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மாநகராட்சி பள்ளி, இலவச பள்ளி மேற்கண்ட ஏதேனும் ஒரு பள்ளியில் பயின்றவராக இருக்கவேண்டும்.
- 12ம் வகுப்பில் 70 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்திருக்கவேண்டும்.
- வருடத்தில் 50 மணிநேரங்கள் சமூகத்தொண்டு செய்யவேண்டும். அதுமட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாணவருக்காவது படிக்க உதவி செய்வோம் என உறுதிமொழியோடு செயல்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
மாணவர்கள் 89 55 66 44 10 இந்த எண்ணைத் தொடர்புகொண்டால் நிறுவனத்தை சார்ந்தவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் உங்கள் சுயவிவரத்தை அளிக்கவேண்டும். நீங்கள் தகுதி உடையவராக இருப்பின் அவர்கள் உங்களை ஒரு வாரத்திற்குள் அழைப்பர்.