![Sandalwood hoarding at home; The old man was arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q9YwIVg7Fyd0rpDoNw482ZO73m_nk5GIHHtvgKTfQl4/1719423496/sites/default/files/inline-images/a72371.jpg)
கோப்புப்படம்
ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் பிடித்து சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.