Skip to main content

மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்கள் மீது வழக்கு!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

 Case against those who  bought seats in medical college!

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது உப்புவேலூர். இப்பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 65) உரக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு திருச்செங்கோடு மாவட்டம் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் என்பவரிடம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 63 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது மட்டுமல்லாமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.

 

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "தன்னுடைய மகன் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பப்பட்டார். அதன் பேரில், என்.ஆர்.ஐ கோட்டாவில் சீட்டு வாங்கித் தருவதாக நாமக்கல் பகுதியைச் சேர்ந்த புரோக்கர்கள் இராமச்சந்திரன் முரளி ஆகியோர் மூலம் பன்னீர்செல்வம் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் எனது மகனுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.ஐ கோட்டாவில் எம்.பி.பி.எஸ் சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி 63 லட்சம் பணம் பெற்றுக் கொண்டார். சொன்னபடி சீட்டும் வாங்கித் தரவில்லை கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டபோது தர மறுத்துவருவதோடு அதை ஏமாற்றுவதற்கும் முயற்சிசெய்து வருகிறார்.

 

மேலும், பன்னீர்செல்வமும் அவரது மகன் சீனிவாசனும் உடந்தையாக இருந்து செயல்படுகிறார். எனவே தந்தை மகன் ஆகிய இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்குப் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று புகாரில் கூறி உள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் அவரது புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் சீனிவாசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்