Published on 12/04/2022 | Edited on 12/04/2022
![Government of Tamil Nadu announces special buses for consecutive holidays](http://image.nakkheeran.in/cdn/farfuture/L5WOpQ1HejreqEBUxncmkltajq6GQW94h_qN2R8kBKo/1649782295/sites/default/files/inline-images/bus434.jpg)
தொடர் விடுமுறையைத் தொடர்ந்து சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களையொட்டி, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். நாளை (13/04/2022) மற்றும் நாளை மறுநாள் (14/04/2022) சென்னையில் இருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து சேலம், கோவை, நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.