தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 21ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேற்றுமுதல் (14.06.2021) கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்கவும் உத்தரவு வெளியாகியிருந்தது.
ஊரடங்கு முடியும்வரை மின்வெட்டு இருக்காது என ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சாரத்துறை சார்பில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ''மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. 50 சதவீதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது. மே 10ஆம் தேதிமுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தைக் கட்ட இன்று கடைசி நாள்'' என்றார்.