பிப்ரவரி 11- ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்பொதுக்குழு கூட்டம் சென்னையில்கூடுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், பிப்ரவரி 11- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடிகரும், கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூடுகிறதுஎன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் குழுவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர். இந்தப்பொதுக்குழுவில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா மாநாடு உள்ளிட்ட முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.