இளம் பெண் ஒருவர் தன் நீண்டகால பெண் நண்பருக்காக ஆணாக மாறி அவரை திருமணம் செய்த நிகழ்வு ஒடிசாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மங்கல்கிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயிஷா மற்றும் பானு. இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனால் அவர்கள் இருவரில் ஒருவர் ஆணாக மாற சம்மதித்துள்ளனர்.
![jh](http://image.nakkheeran.in/cdn/farfuture/WaztMxejfteX1k2tGxEGJsz7tDe4eZfucA49eLLnji0/1581436458/sites/default/files/inline-images/ghjl_2.jpg)
இதற்காக ஆயிஷா தில்லி சென்று சுமார் 5 லட்சம் செலவில் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.