Skip to main content

அயோத்தி தீா்ப்பில் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக கருத்து -எம்எல்ஏ மீது வழக்குபதிவு செய்யக்கோரி புகாா்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நாடு முமுவதும் பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட அயோத்தி தீா்ப்பு 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமா்வு வழங்கியது. இந்த தீா்ப்பு வெளியவதையொட்டி எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாதபடி நாடு முமுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு தீா்ப்பு குறித்து செய்திகள் மற்றும் கருத்துகள் பாிமாறிகொள்வதில் சில கட்டுபாடுகளையும் ஊடகங்களுக்கு விதித்தியிருந்தது. அதேபோல் சமூக வலைத்தளங்களுக்கும் கடுமையான கட்டுபாடுகளை  விதித்திருந்தது.

 

bb


இதனால் தீா்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிடுவதை அனைத்து தரப்பினரும் தவிா்த்தனா். இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியை சோ்ந்த இருவா் அயோத்தி தீா்ப்புக்கு எதிராக கருத்து தொிவித்ததால் அவா்கள் மீது கொச்சின் சென்ட்ரல் போலீசார் ஐபிசி 153A1, 330b, 120 ஆகிய பிாிவுகளில் வழக்குபதிவு செய்தனர். அயோத்தி தீா்ப்புக்கு எதிராக கருத்து தொிவித்ததால் வழக்குபதிவு செய்யப்பட்டதும் கேரளாவில் மட்டும் தான்.

 

bb


இந்தநிலையில் பாஜகவின் அங்கமான பாரதிய யுவ மோா்சா கேரளா மாநில தலைவா் பிரகாஷ்பாபு கேரளா டிஜிபி லோக்நாத் பெகராவை நோில் சந்தித்து ஒரு மனு கொடுத்தாா். அதில் எா்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துற தொகுதி மா.கம்யூனிஸட் எம்எல்ஏ ஸ்வராஜ் அயோத்தி தீா்ப்பு குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் இன்றைய சூழலில் எதிா்ப்பு கருத்துகளை சொல்ல முடியாத  இந்த இந்தியாவில் இந்த தீா்ப்புக்கு மாற்றாக இன்னொரு தீா்ப்பு வரும் என்று மக்களாகிய நீங்கள் எதிா்பாா்த்தீா்களா? யாரும் அந்த மாதிாி ஒரு தீா்ப்பு வரும் என்று எதிா்பாா்த்தியிருக்க மாட்டீா்கள் என்பதுதான் உண்மை என்று மத பிரச்சனையை தூண்டும் விதமாக கருத்து தொிவித்திருக்கிறாா் என்றும், இதனால் ஏன் அவா் மீது வழக்கு பதிவு செய்யவில்லையென்றும் ஏற்கனவே இருவா் மீது வழக்குபதிவு செய்யப்பட்டியிருப்பதை சுட்டிக்காட்டி புகாா் கொடுத்தியிருக்கிறாா்.

 

 

 

சார்ந்த செய்திகள்