Published on 26/09/2019 | Edited on 26/09/2019
தமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியை அக்டோபர் 15- ஆம் தேதிக்குள் முடிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
![tamilnadu municipality corporation elections in November](http://image.nakkheeran.in/cdn/farfuture/cBAf9FOa8nyGQoS9GWrYHnMb_ffRlT_Q8BKCAHDWpMQ/1569484846/sites/default/files/inline-images/EC_0.jpg)
இதனிடையே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், அக்டோபர் 24- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.