Skip to main content

"முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றுகிறார்"- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

"Excellent service as Chief Minister" - Former Minister Cellur Raju Praise!

 

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அனைவரும் நோய்நொடியின்றி வாழ வேண்டியும், 'ஒமிக்ரான்' கரோனா தொற்று நீங்க வேண்டியும், கரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்துள்ளோம்.

 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு செய்தது போல தி.மு.க. அரசும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறார், அவரோடு சேர்ந்த அனைவரும் பணியாற்றி கரோனா பரவலைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாடு மக்களுக்கு தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை தி.மு.க. அரசு செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால், தமிழ்நாட்டில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

 

புத்தாண்டு நாள் என்பதால் நகைக்கடன் குறித்து இன்று எதுவும் பேச வேண்டாம். மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது. வீதியெங்கும் சாக்கடை பெருக்கடுத்து ஓடும் நிலை உள்ளது. அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் ஜனவரி 4- ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

"Excellent service as Chief Minister" - Former Minister Cellur Raju Praise!

மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். அந்த நிதியை முதலமைச்சர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும், அ.தி.மு.க. மக்களின் நலனுக்காக போராடும்.

 

வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசிவருபவர் மோடி,  உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றி வருகிறார். திருக்குறள், புறநானூறு, ஆகியவற்றை ஐ.நா. வரை எடுத்துச் சென்று பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

 

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும். மேலும் தி.மு.க .எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு, தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்னவென்று" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை; தொடரும் ரெய்டு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
From former ministers to MLAs; Raid on

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு; நீதிபதி அதிரடி உத்தரவு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Judge action order Case against AIADMK ex-ministers

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தமிழக அரசைக் கண்டித்து, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (16-02-24) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறியதாவது, ‘ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்ட விரோதமாக கூடிய கூட்டமாக கருத முடியாது. எனவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி ஆனந்தன் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.