திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வேடசெந்செந்தூர், கொடைக்கானல் மற்றும் கீழ் மலை, மேல்மலை பகுதிகளில் கஜா புயல்
கோரத்தாண்டவம் ஆடியதின் மூலம் மக்களும் விவசாயிகளூம் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் கூட ஆளும் கட்சி யை விட திமுக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.கள் தான்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த 26 ம்தேதி தேமுதிகவின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுதீஸ் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வந்த பிரேமலதாவுக்கு மாவட்ட எல்லையான அய்யலூரில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் 500ற்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பெருந்திரளாக நின்று வரவேற்பு கொடுத்தனர்.
விஜயகாந்த் வந்தால் எந்த அளவுக்கு கட்சி கார்கள் வரவேற்பு கொடுப்பார்களோல
அதுபோல் பிரேமலதாவுக்கும் கொடுத்தனர். அப்போது கூட்டத்தில் உள்ள தேமுதிகவினர், அண்ணியார் வாழ்க இளைய கேப்டன் வாழ்க என கோஷம் போட்டனர். அதை தொடர்ந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்ற பிரேமலதா கொடைக்கானலில் பாதிக்கப்பட்ட கல்லறை மேடு,பதுக்காடு, பேத்துப்பாறை, நாயுடுபும் உள்ளிட்ட சில இடங்களில் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். அதன் பின் கொடைக்கானலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது உடனிருந்த விஜய பிரபாகரனிடம் கட்சிக்காரர்கள் பலர் சென்று பேசியும் போட்டோ மற்றும் செல்ஃபி எடுப்பதுமாக இருந்தனர். அப்பொழுது கட்சிக்காரர்கள் சிலர் இளைய கேப்டனை பேச சொல்லுங்கள் அண்ணியாரே என்று கூறியும் கூட விஜய பிரபாகரன் பேசவில்லை.
அதன்பின் பிரேமலதா வேடசந்தூர் பகுதியில் உள்ள கோப்பைப் போட்டியில் நிவாரண உதவிகள் வழங்கி விட்டு நத்தத்தில் ஒரு பொதுக்கூட்டம் போல் மேடை அமைக்கப்பட்டு புயலால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பக்கெட்டுடன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
ஆனால் ஆரம்பித்திலிருந்து விஜய பிரபாகரனை கட்சிக்காரர்கள் பேச சொல்லி வலியுறுத்தியதின் பேரில் நத்தத்தில் பைக்கை பிடித்த விஜயபிரபாகரனோ.... தேமுதிக அழிந்து விட்டது என்று கூறி வருகிறார்கள். ஆனால் எழுச்சி நடை போட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் அதிகமாக தொண்டர்களையும் இளைஞர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டும். என்னை தலைவர் கேப்டனின் மகன் என்று நினைக்காதீர்கள். நண்பர்கள் போலவும் தோழர்கள் போலவும் ஏன் கல்லூரியில் படிக்கும்போது மாமன் மச்சான் என்று கூப்பிட்டு கொள்வோமே அது மாறி கூட பேசி பழகிகொள்ளுங்கள் என சிவாஜி படத்தில் ரஜினி பேசுவது போல் பேசி விட்டு, கூடிய விரைவில் உங்கள் கேப்டன் பழைய கேப்டனாக வருவார் அவரை முதல்வராக ஆக்குவதுதான் நம் கடமை என்று கூறினார். அதை கேட்டு கூட்டத்தில் இருந்த மக்கள் பலத்த கை தட்டலை எழும்பினார்கள்.