Published on 07/02/2019 | Edited on 07/02/2019
சின்னதம்பி யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க தடாகம் பகுதியிலுள்ள செங்கற்சூளைகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். மேலும் செங்கற்சூளையில் இருந்து வரும் நச்சு புகையே யானைகள் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வர காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கில் சின்னத்தம்பி யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வரும் 11 ஆம் தேதி தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு பிப்.11 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.