Published on 13/11/2020 | Edited on 13/11/2020
![chennai local trains diwali festival peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/W0gZNKJijonpeUMhas9kskgvPM3DKniSOwO32oLKQDI/1605237758/sites/default/files/inline-images/trains%20%282%29.jpg)
வெளியூர் செல்வதற்கான எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் இருந்தால் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்துக்கு செல்லக்கூடியவர்களும் புறநகர் ரயிலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையில் 154 ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 50 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அத்தியாவசிய தனியார் நிறுவன பணியாளர்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், இத்தகைய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.