![neet exam results data removed national testing agency](http://image.nakkheeran.in/cdn/farfuture/fbRKvrimq9bN_8tap8hdpXigxd3Soay7aDNK8IQO60s/1602912215/sites/default/files/inline-images/neet5565.jpg)
தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று (16/10/2020) மாலை தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவு நீக்கப்பட்டிருக்கலாம், மாற்றப்படலாம் அல்லது தற்காலிகமாக பார்க்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வை எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.