![Textbook printing association meets journalists](http://image.nakkheeran.in/cdn/farfuture/OyGy3xJJAjCkTBdeoahELkF876uJidx2wrhRaAsOVRE/1639743587/sites/default/files/2021-12/book-printers-2.jpg)
![Textbook printing association meets journalists](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mdpo1HipZsiwUtMcw7yuMEIP72669CdimoaEPpdB5eE/1639743587/sites/default/files/2021-12/book-printers-3.jpg)
![Textbook printing association meets journalists](http://image.nakkheeran.in/cdn/farfuture/C788LujR-_AMJ3POHPAesAvRyW_oRmeMFFMmSNWswgE/1639743587/sites/default/files/2021-12/book-printers-1.jpg)
Published on 17/12/2021 | Edited on 17/12/2021
இன்று சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பாடநூல் அச்சடிக்கும் பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ்நாடு பாடநூல் அச்சடிக்கும் அச்சகத்தாரையும் அதனைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் படி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதே போல் தமிழ்நாடு பாடநூல்களை தமிழகத்திலேயே உள்ள அச்சகங்களில் அச்சடிப்பதால் பல்வேறு குடும்பங்கள் பயன்பெறும். வெளிமாநிலங்களில் அச்சிடுவதால் தமிழ்நாட்டு அரசுக்கு நிதிச் சுமை பெருகும் எனத் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு பாடநூல் அச்சடிக்கும் அச்சகத்தாரையும் அதனைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களையும், தொழிலாளர்களின் நிலையையும் விவரித்தனர்.