Published on 30/06/2021 | Edited on 30/06/2021
![tamilnadu cm special officers appointed tn govt order](http://image.nakkheeran.in/cdn/farfuture/N_aysvC2IrYp0lIvyNXo358TRIftOPuT3RAwHMmcCnQ/1625058696/sites/default/files/inline-images/tn%20govt6_0_23.jpg)
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்.-ஐ நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பாக இது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக வி.பி.ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.