![Plasma donation for the first time in Tamil Nadu](http://image.nakkheeran.in/cdn/farfuture/eMhxRveZZGCstLRnqsmOOfemIFkhK6wMaQYu1v1e9cc/1589213384/sites/default/files/inline-images/adfAFVGB_0.jpg)
தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 798 ஆக உள்ளது. தற்போதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 538 பேருக்கு இன்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யபட்டதால், சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்வதற்கான வசதிகள் உள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவரிடமிருந்து இருந்து பெறப்படும் பிளாஸ்மா மூலம் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முதலாக சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்த பெண் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் இந்த பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.