திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளியில் படித்து வந்த மாணவர் மீது அவருடன் படித்த சக மாணவர்கள் சாதிய போக்குடன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தில் மாணவரின் தங்கையும் காயமடைந்து, இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சாதிய வன்மத்தோடு நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500-க்கும் மேற்பட்ட வி.சி.கவினர் வேலூர் மாநகரில் பேரணியை நடத்தினர். இந்த பேரணி வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகில் தொடங்கியது. அண்ணா சாலை, ஊரிசு கல்லூரி, இஸ்லாமிய பள்ளி ரவுண்டானா வழியாக டோல்கேட் வரை என ஒரு கி.மீ தூரத்திற்கு மேளதாளங்களுடன் பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணியில் பெண்களும் கலந்து கொண்டனர். மக்களின் கவனத்தை ஈர்க்கவும், பேரணியின் கருத்து மக்களிடம் செல்லவேண்டியும் குத்தாட்டம் போட்டபடி பேரணியாகச் சென்றனர்.