![vanaja](http://image.nakkheeran.in/cdn/farfuture/nWCLy5OlyaRSbYsXNwbdx81BvJMxvkFbSwjisldnPJo/1533347686/sites/default/files/inline-images/vanaja.jpg)
பொன்னமராவதி வட்டார வளமையம் மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா திடீர் ஆய்வு.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் பொன்னமராவதி வட்டார வளமையத்தினை 17ந்தேதி(செவ்வாய்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா எவ்வித முன்அறிவிப்பும்இன்றி பார்வையி;ட்டு திடீர் ஆய்வு செய்தார். முதலில் வட்டார வளமையத்தின் வைப்பறை,ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் அறை, கழிப்பறை, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுநர்களின் நகர்வுப்பதிவேட்டினை பார்வையிட்டு, ஆசிரியர் பயிற்றுநர்கள் நகர்வுபதிவேட்டில் குறிப்பிட்டபடி பார்வையிட சென்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களை அலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் நகர்வுபதிவேட்டில் குறிப்பிட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார்களா என ஆய்வு செய்தார். மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட சென்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட அறிவுறுத்தினார்.
பகல்நேர பாதுகாப்பு மைய ஆசிரியை, உதவியாளர் மற்றும் மைய செயல்பாட்டுக்கு பாராட்டு.
பின்னர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக நடைபெறும் பகல்நேர பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு பகல்நேர பாதுகாப்பு மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பயிற்சி அளிக்கும் மைய ஆசிரியை எம். பொன்னம்மாள், உதவியாளர் ஏ. அம்சவள்ளி ஆகியோரையும், பகல்நேர பாதுகாப்பு மைய செயல்பாட்டினையும் பாராட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகத்தினை பார்வையிட்டு அலுவலக செயல்பாட்டினை ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆய்வின்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, பொன்னமராவதி உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.இராமதிலகம், பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ஆர்.செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
படவிளக்கம்: பொன்னமராவதியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக நடைபெறும் பகல்நேர பாதுகாப்பு மையத்தினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
மேற்கண்ட செய்தியினை தங்களின் நாளிதழில் பிரசுரம் செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.