Published on 13/12/2020 | Edited on 13/12/2020
![makkal needhi maiam party , actor kamal haasan tweet](http://image.nakkheeran.in/cdn/farfuture/sMrpLZ2h1ACBdY9w9JzY0znsYhROpP8BcLSC8z38umo/1607833081/sites/default/files/inline-images/kamal333.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே' என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, 2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் முதற்கட்ட பரப்புரையை கமல்ஹாசன் இன்று முதல் டிசம்பர் 16- ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.