Published on 02/01/2020 | Edited on 02/01/2020
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
![LOCAL BODY ELECTION 05.00 CLOCK RESULTS](http://image.nakkheeran.in/cdn/farfuture/_mJm_ForlkI3Y-vOZtIpCYFfYeTnWwDZgzxeI4R_yLM/1577972952/sites/default/files/inline-images/TN3.jpg)
இந்நிலையில் மாலை 05.25 PM மணி வரை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களையும் சேர்த்து வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியானது. அதன்படி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி: 20,687 பேரும், ஊராட்சித் தலைவர்: 1,552 பேரும், ஒன்றிய கவுன்சிலர்: 393 பேரும் பெற்றி பெற்றுள்ளனர்.