Skip to main content

பி.இ, பி.டெக் இரண்டாமாண்டு, பகுதி நேர சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-உயர்கல்வித்துறை அறிவிப்பு!!

Published on 19/07/2020 | Edited on 20/07/2020

 

 Apply for BE, B.Tech Second Year, Part Time Admission Website - Higher Education Announcement !!

 

தமிழகத்தில் கரோனா காரணமாக பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் பி.இ, பி.டெக் இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை இணையத்தளம் மூலமாக நடைபெறும் என அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேபோல் பி.இ, பி.டெக் பகுதிநேர சேர்க்கையும் இணையத்தளம் மூலமாக நடைபெறும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுகலை மாணவர் சேர்க்கையும் இணையத்தளம் மூலமாக நடைபெறும். நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் இதுவரை 55,995 பேர் விண்ணப்பித்துள்ளனர். இணையத்தள விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நடைபெறும். இணையத்தள பதிவு முடிவு பெற்றவுடன் ரேண்டம் எண் வழங்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரேண்டம்  எண் அவரவர் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். டி.என்.இ.ஏ இணையத்தளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதுடன்,  தகவலும் அனுப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்