Skip to main content
Breaking News
Breaking

திமுக போராடாமல் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும்: விஜயகாந்த்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
Vijayakanth


திமுக போராடாமல் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

திருவாரூரில் நேற்று மாலை தேமுதிக சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் பேசியதாவது,

விவசாயிகள் பிரச்னைகள் தீர வேண்டும் எனில் காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைத்தே ஆக வேண்டும். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். காவிரி பிரச்னையில் எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன என்பதை மக்கள் உணர வேண்டும். காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகத்தில் நடக்கிறது.

திமுக போராடாமல் ராகுலை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே போதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும். எனவே, அனைவரும் நாடகம் ஆடுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்