Skip to main content

கடலூர் மாவட்டத்தில் குற்றசம்பவங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
c

 

கடலூர்  மாவட்டத்திலுள்ள  பொதுமக்கள் மாவட்டத்தின் எந்த மூலையிலாவது சட்டவிரோதமான செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை  உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவிடும் வகையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்  வோடாபோன் தொலைபேசி நிறுவனத்தின் உதவியுடன் இலவச வாட்ஸ்-அப் எண்ணை  9087300100 அறிமுகப்படுத்தினார்.

 

 இதுகுறித்து அவர் கூறுகையில்,   பொதுமக்கள்  இந்த வாட்சப் என்னை பயன்படுத்தி  தவறு நடக்கும் இடத்தின் போட்டோ அல்லது வீடியோ அனுப்பினால் அனுப்பியவர்கள் யார் என்பதை பாதுகாத்து  மாவட்ட காவல்துறை மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தனம், வோடோபோன் ஐடியா நிறுவனத்தின்  மண்டல மேலாளர்கள் கேசவராஜ் ,முனிஷ்குமார்,மேனகா, விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதுகுறித்து  தகவல் தொடர்பு அறிவிப்பு பதாகைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  பொதுமக்கள் கூடும் 56 முக்கிய இடங்களில் வைக்கப்படும் என்று எஸ்பி கூறினார்.

 

சார்ந்த செய்திகள்