Published on 07/07/2020 | Edited on 07/07/2020
![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/yB2jFBQKjohbKvNhBxUMYEEXUttosgcBc5WctmfrSY0/1594105287/sites/default/files/inline-images/corona%2045_7.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அலுவலகத்தை இழுத்து மூடி தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் யாரும் அடுத்த 15 நாட்களுக்கு மேல் வரக்கூடாதென துண்டுப் பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. முகப்பு வாயில் முன்பு, கரோனா தொற்று காரணமாக வெளியில் யாரும் அதிகம் வர வேண்டாம். வீட்டில் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் அந்தப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்கள் இருப்பதால் மற்ற ஊழியர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டு அவர்களும் ரத்த மாதிரி பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.