![cbi](http://image.nakkheeran.in/cdn/farfuture/cr6vOH811c3BhFNMOWWbbj0ByzlkESzb8NiSzbuDhbY/1594465553/sites/default/files/inline-images/SZSFSFSFSF_16.jpg)
சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை மரணம் தொடர்பான விசாரணையை ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட சி.பி.ஐ.அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
தற்பொழுது சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன் ஜெயராஜ், பென்னிக்ஸிற்கு அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை செய்தது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் அந்த அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்பாக ஜெயராஜ் வீட்டில், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.