குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.
![caa dmk party signature movement in chidambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/61MilTRg0eVeyOo4I8dW19DlIfXUpzL0FY6AYcPRIos/1581217129/sites/default/files/inline-images/mrk2.jpg)
அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மேலவீதி அண்ணா சிலை அருகே நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், புவனகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, மதிமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினர் கலந்துக்கொண்டு கடைத்தெருவிற்கு வரும் பொதுமக்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் எடுத்துக்கூறி கையெழுத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் என அனைவரும் திரளாக வந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.