அட்லி இயக்க, விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் பிகில் . இந்த படத்தில் விஜய் வயதான ரௌடியாகவும், இளம் கால்பந்து வீரர் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள சாய் ராம் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.
![bigil movie trailer released](http://image.nakkheeran.in/cdn/farfuture/4wDdthBAHtAdgX1100CJexXkeL17IdZ3j47VDtqLtn0/1570884320/sites/default/files/inline-images/z24_17.jpg)
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
மொத்தம் 2.41 நிமிடம் உள்ள அந்த ட்ரைலரில் ''ஃபுட் பால் எல்லாம் தெரியாது ஆனா எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்'' என ஓல்ட் கெட்டப்பில் விஜய் பேசும் வசனங்களுடன். '' ரொம்ப ஆக்சன் ஹீரோவா மாறிட்ட மைக்கல் காதலுக்கு மரியாதை எல்லாம் உனக்கு மறந்தே போச்சு '' என நயன் பேசும் வசனமும் இடம்பெற்றுள்ளது.