சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (23.11.2021) நடக்கிறது. இது தொடர்பாக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நவ. 23ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடக்கிறது.
மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வரின் சேலம் வருகை குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், இளைஞர்கள், மகளிரணி, விவசாயிகள் அணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், மாநகரில் உள்ள கோட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.