![sbk](http://image.nakkheeran.in/cdn/farfuture/ea_LvOStI3wU_EL7xGipV4DFA7twMqxy9yBlcJcTH_0/1533347628/sites/default/files/inline-images/IMG_20180716_132556.jpg)
நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும், எஸ்.பி.கே குவாரி, ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
சென்னையில் இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, தற்போது வரை நீடித்து வருகிறது. இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சில முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.பி.கே நிறுவனம் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் மேற்கொண்டு, பல பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
![abk](http://image.nakkheeran.in/cdn/farfuture/flcI6-s6EGrtrDxrGdF_kHbH5Fq8E_omrP5NO6Wnms8/1533347628/sites/default/files/inline-images/IMG_20180716_141332.jpg)
இதேபோல், அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ், செய்யாதுரைக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், மற்றும் அவருக்கு சொந்தமான மில், கல்குவாரிகளிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. 6 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரர்களாக உள்ள செய்யாதுரை மற்றும் நாகராஜூடன் 2 அதிமுக அமைச்சர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.