தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்கவி என்ற பெண்ணை கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். இதில் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
![vzvz](http://image.nakkheeran.in/cdn/farfuture/TjMjJ7QWPeO3bh5-N6giUbdY-8CCL6i_v5zke_PvbLQ/1585382974/sites/default/files/inline-images/Untitled_41.jpg)
அதன்பின் மீண்டும் படப்பிடிப்புகளில் பிசியான அவர் தற்போது கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்து வந்தார். இந்தநிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வரவேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைப்பது குறித்து அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அவர் பேசும்போது...'ஏப்ரல் 9-ந்தேதி எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டு இருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் அது நடக்குமா என்று தெரியவில்லை' என சமீபத்தில் அவர் கூறியுளள்ளது குறிப்பிடத்தக்கது.