Skip to main content

"டாக்டர் படத்திலேயே ஜாலியாக இருந்தது; இந்தப் படத்தில்..." - 'டான்' அனுபவம் பகிரும் பிரியங்கா மோகன் 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Priyanka Mohan

 

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் நாயகி பிரியங்கா மோகனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் டான் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

இந்தப் படத்தில் நடித்தது என்னுடைய கல்லூரி நாட்களுக்கு திரும்பிச் சென்றது மாதிரி இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட் பயங்கர ஜாலியா இருக்கும். நிறைய திறமையான மனிதர்களுடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய துறுதுறுவென இருக்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். முதல்படம் முடிப்பதற்கு முன்பாகவே அடுத்த படமும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இந்தக் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சிபி சாருக்கு நன்றி. டாக்டர் படத்திலேயே ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டு ஜாலியாக இருந்தது. இந்தப் படத்தில் கேங் இன்னும் பெரிதாகிவிட்டது. 

 

ஜாலியாக பேசினாலும் என்கரேஜ் பண்ணுகிற மாதிரி மோட்டிவேஷனாகவும் சிவகார்த்திகேயன் பேசுவார். இயக்குநர் சிபி முதல் படம் இயக்குவது மாதிரியே இல்லை. அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதை நடிகர்களிடம் இருந்தும் வாங்கிவிடுவார். படத்தில் நடித்த அனைவருமே அனுபவமுள்ள நடிகர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து தினமும் புதிய புதிய  விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

 

நான் ரொம்ப வருஷமாவே அனிருத் ரசிகை. இப்ப அவர் இசையமைச்ச படத்துல நானும் நடிச்சிருக்கேன் என்பது ரொம்ப பெரிய விஷயம். படத்தில் சிவாங்கி என்னுடைய ஜூனியராக நடித்திருப்பார். ஷோவில் அவரை எப்படி பார்க்கிறோமோ, அதேபோலத்தான் துறுதுறுவென இருப்பார். 

 

டான் ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும். ஃபேமிலி மட்டுமில்லாமல் காலேஜ் பசங்க, குழந்தைகள் என அனைவரும் விரும்பக்கூடிய படமாகவும் இருக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘உன் ஒளியிலே...’ - காதலில் ‘கேப்டன் மில்லர்’ தனுஷ் - பிரியங்கா மோகன்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
captain miller second single update

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்ததுள்ளது. இப்படம் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு அடுத்த மாதமான 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்...’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. தனுஷ் பாடியிருந்த இப்பாடல், வில்லன்களுக்கு தனுஷ் எச்சரிக்கை செய்யும் வகையில் இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘உன் ஒளியே...’ என்ற பாடல் நாளை 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழோடு சேர்த்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு சிறிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை பார்க்கையில் படத்தில் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் இருவருக்குமான காதல் பாடலாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

Next Story

தனுஷ் பட பணிகளை தொடங்கிய பிரியங்கா மோகன்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

priyanka mohan stars dubbing for captain miller

 

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியான நிலையில், அதன் ரிலீசுக்குக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

 

இந்தநிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை பிரியங்கா மோகன் தொடங்கியுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.