கொக்கி, திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் ஆகிய திரப்படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. இவர் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராகவும், ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.
![pooja gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/DWGjXgLWSZVFK9IT99pspz5-E-b2kyHk1s_k3IzEXR0/1553082414/sites/default/files/inline-images/pooja-gandhi.jpg)
பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் சில நாட்களாக தங்கியிருந்த பூஜா வாடகை பணத்தை செலுத்தாமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.
இதனால் உஷாரான ஹோட்டல் நிர்வாகம் அவரிடம் பில் பணத்தை செலுத்துமாறு நெருக்கடி கொடுத்துள்ளது. இந்நிலையில், பூஜா காந்தி ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரியாமல் தன்னுடைய பெட்டியை எடுத்துகொண்டு வெளியேறிவிட்டார். பின்னர், இந்த விஷயம் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரியவர, நான்கரை லட்சம் பணம் கட்டாமல் ஓடிவிட்டாரே என அதிர்ச்சியடைந்து போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, போலீஸார் பூஜா காந்தியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன் பின் இரண்டு லட்சத்தை ஹோட்டல் நிர்வாகத்திடம் கட்டியுள்ளார். மீதமுள்ள தொகையை கட்ட காலஅவகாசம் கேட்டிருக்கிறார். கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகியே இப்படி செய்திருக்கிறாரா என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பி.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.