![hari directing jayam ravi new film](http://image.nakkheeran.in/cdn/farfuture/PoY66vnmXkYoo95iAwz5BP5vpNEOWwKKVQvU2cmsApA/1653998119/sites/default/files/inline-images/758_1.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி தற்போது அஹ்மத் இயக்கும் 'ஜன கன மன', கல்யாண கிருஷ்ணன் இயக்கும் 'அகிலன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அகிலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயம் ரவி, ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் ஹரி தற்போது அருண் விஜய்யை வைத்து ’யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்தாக ஜெயம் ரவியுடன் இணையவுள்ளார் ஹரி. இப்படம் இயக்குநர் ஹரிக்கே உரித்தான விறுவிறுப்பு கலந்த ஆக்ஷன் படமாக உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ’யானை’ படத்தின் ரிலீஸுக்கு பிறகு இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.