Skip to main content
Breaking News
Breaking

'நரகாசூரன்' படத்திற்காக காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் 

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
naragasooran

 

 

 

அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'நரகாசூரன்'. 'துருவங்கள் 16' படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பை பார்த்த பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், "எப்போது படம் வெளியாகும்...? நான் உங்களுடைய 'துருவங்கள் 16' படத்திற்கு பெரிய ரசிகன்" என பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்து உற்சாகமான கார்த்திக் நரேன், "நன்றி தெரிவித்து "ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என பதிலளித்தார். அதற்கு அனுராக் காஷ்யப் 'வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்