![Millions of counterfeit notes in Vellore ...!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zT86XOb5C9PPkd2a5XFvnk7sHDtPewXGyJvbcNcWQpE/1632554706/sites/default/files/inline-images/kal_1.jpg)
வேலூர் மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள ஜீவா நகரில் சரவணன் என்பவரது வீட்டில் கள்ளநோட்டுகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் குறிப்பிட்ட நபரான சரவணன் வீட்டிற்குச் சென்று சோதனை செய்ததில், கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளநோட்டுகள் குறித்து சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் ஒன்றான வேலூரில் பல லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.