!["Kanyakumari East District DMK Secretary Change" - DMK Leadership Action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/z7nnCGuPcLy4yQGNu-tvshz_M4mNKOmrmRX8kj6_UGc/1646414999/sites/default/files/inline-images/social_9.jpg)
தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆர்.மகேஷ் பி.ஏ., பி.எல்., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.வின் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதேபோல், திருவள்ளூர் மத்திய மாவட்டம், தி.மு.க.வின் பூவிருந்தவல்லி நகரச் செயலாளர் எம்.ரவிக்குமார், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.