Published on 13/04/2019 | Edited on 13/04/2019
நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல் பறக்கும் படையும், வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
![it raid](http://image.nakkheeran.in/cdn/farfuture/fO5rHnjejesAq71821H86oxZJ2_GnwjOI4Ntwqz9A4Y/1555147196/sites/default/files/inline-images/z78_0.jpg)
இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கொரட்டியில் உள்ள அதிமுக பிரமுகரான கண்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிபிசிஐசி பள்ளியிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.