![husband incident his wife with a knife!](http://image.nakkheeran.in/cdn/farfuture/7HplRyK2UBAjO_zTziusAzIywVlZ55jrP59y496sGdA/1727438112/sites/default/files/inline-images/5_213.jpg)
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி சசிகலா. இந்த நிலையில் தியாகராஜன் மனைவி சசிகலாவை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், இன்று அதிகாலை வழக்கம்போல் தனது மனைவியை சந்தேகப்பட்டு தியாகராஜன் சண்டையிட்டு வந்துள்ளார். இரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தியாகராஜன் அருகே இருந்த கத்தியை எடுத்து மனைவி சசிகலாவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் போலீசார் சசிகலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.