உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற சீதாராமர் கோயிலில் நேற்று முன்தினம் இஸ்லாமியர்களுக்கான சிறப்பு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
![ram temple in ayodhya organise iftar for islam people](http://image.nakkheeran.in/cdn/farfuture/PNMHCfj612mOQ60JMCfE2YNhtKypMxPhsrUm2QGNCy4/1558500829/sites/default/files/inline-images/iftar.jpg)
ரமலான் நோண்பு நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக அக்கோயிலின் பூசாரி தெரிவித்தார். இது குறித்து மேலும் பேசிய அவர், "இப்தார் விருந்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்வது இது மூன்றாவது முறையாகும். எதிர்காலத்திலும் இதுபோல் நாங்கள் தொடர்ந்து செய்வோம். ஒவ்வொரு பண்டிகையையும் மதப் பாகுபாடின்றி நாம் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் இது குறித்து இப்தார் விருந்தில் பங்கேற்க ஒரு இஸ்லாமியர் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையை நான் எனது இந்து சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவேன். வெவ்வேறு சமூகத்தினர் இதுபோல் ஒன்றாக பண்டிகை கொண்டாடுவதை, உள்நோக்கம் கொண்ட சிலர் விரும்புவதில்லை. மதத்தின் பெயரால் அரசியல் செய்யப்படும் நமது நாட்டில் இது போல சிலர் நமக்கு அன்பையும் போதிக்கின்றனர்" என தெரிவித்தார்.