![vanitha vijayakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/PRI5VGTV1ma7Z2ekStm-yCYPyKF5WLLh3wvEDroQaH4/1594359912/sites/default/files/inline-images/vanitha-peter_0.jpg)
அண்மையில் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முன்னால் மனைவி இவர்கள் இருவர் மீதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பலரும் சமூகவலைத்தளத்தில் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து விமர்சித்து வருகின்றனர். அப்படிச் செய்பவர்களுக்கு வனிதா விஜயகுமார் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக நடைபெறும் இணையத் துன்புறுத்தல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா கூறுகையில், “உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாதவர்கள் எல்லாம் என்னைக் குறிவைப்பதில் ஆனந்தம் அடைகிறார்கள். ஒருவரைத் துன்புறுத்துவதும், கொச்சையான, அசிங்கமான கருத்துகளைத் தெரிவிப்பதும் சட்டத்துக்குப் புறம்பானது என்பது தெரிந்துகொள்ளுங்கள்.
'இணையத் துன்புறுத்தல்' என்பது விளையாட்டல்ல. அது ஒருவரின் வாழ்க்கையையே பாழாக்கக் கூடிய ஒன்று. நீங்கள் எனக்குச் செய்ய முயற்சிப்பதை நான் சீரியஸாக எடுத்துக்கொண்டால் நான் மன அழுத்தத்தினாலும், விரக்தியினாலும் என்னையே துன்புறுத்திக் கொள்ளக்கூடும். அப்படிச் செய்தால் நீங்கள் அனைவரும் கொலைகாரர்கள் ஆகிவிடுவீர்கள். இதை மற்றவர்களுக்குச் செய்யும் முன் யோசியுங்கள். இது சரியல்ல.
நான் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் சட்டம் என்னைச் சும்மா விடாது. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன். நான் அவருக்கும் என் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதுமானது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்களுக்கு உண்மைக்கு நெருக்கமான எந்த விஷயமும் தெரியாது. இதுபோன்ற எல்லா வகையான குப்பைகளையும் எழுதுவது நான் யார் என்று சொல்லாது. ஆனால், நிச்சயமாக நீங்கள் யார் என்று சொல்லும்” என்று தெர்வித்துள்ளார்.