Skip to main content
Breaking News
Breaking

2-வது முறையாக கூட்டணி சேரும் சிம்பு, இயக்குனர் ஹரி...

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

சாமி 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி எந்த ஹீரோவுடன் கூட்டணி சேருவார் என்று பலரும் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளனர். 
 

simbu hari


இந்நிலையில், கோவில் படத்தை அடுத்து மீண்டும் சிம்புவுடன் கூட்டணி சேர ஹரி பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

கடந்த 2004-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சிம்பு நடித்த படம் 'கோவில்'. சோனியா அகர்வால், ராஜ்கிரண், நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இப்படம் மாஸ் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் ஒரளவிற்கு மக்களின் வரவேற்பை பெற்றது.
 

devarattam


தற்போது இயக்குனர் ஹரி தான் தயாரித்த கதையை சிம்புவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஏ.எம் ரத்னம் இதை தயாரிக்க முன்வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

தம்பியின் திருமணத்திற்காக லண்டனிலிருந்து வந்துள்ள சிம்பு, விரைவில் பாங்காக் செல்ல இருக்கிறாராம். இந்த மாத இறுதியில் மாநாடு பட ஷூட்டிங்கை தொடங்க இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்