![shrutihassan](http://image.nakkheeran.in/cdn/farfuture/javdr9MxE-Y3Ghdbic2VgP5qkqqOG9uxIjFYHneOHaA/1533347686/sites/default/files/inline-images/unnamed%20%281%29.jpg)
நீண்டநாட்களாக ஓய்வில் இருந்த ஸ்ருதிஹாசன் கேங்ஸ்டரை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் கேங்ஸ்டராக நடிக்கிறார். புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் இப்படத்தில் வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் படமாக உருவாகும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. அதில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் குறித்து இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் பேசுகையில்.... "ஸ்ருதிஹாசன் கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். மேலும் இப்படத்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.