2013ஆம் ஆண்டு வெளியான 'ஃப்ரோசன்' திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்து சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான டிஸ்னினியின் 'ஃப்ரோசன் 2' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் நவம்பர் 22ஆம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் '.ஃப்ரோசன் 2' படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார்.
![shruti](http://image.nakkheeran.in/cdn/farfuture/iWAusRK3J7-t4gUAJjdHh4JPbi4cTos4wZ9cex0OpHs/1573215025/sites/default/files/inline-images/shruti-haasan-at-tiecon-event-photos-0005.jpg)
இதைத்தொடர்ந்து இப்படத்தின் தமிழ் பதிப்பில் வரும் எல்சாவிற்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். அதில் 'இன் டு தி அன்னோன்' என்ற ஒரு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படம் குறித்து ஸ்ருதிஹாசன் பேசியபோது...
![aX](http://image.nakkheeran.in/cdn/farfuture/HsJcW4mI_6-hsC_kSUv9A2P11fn2L71fNgwFnBGUmh4/1573215052/sites/default/files/inline-images/miga%20miga%20avasaram%20youtube%20bar%20ad_6.jpg)
''ஃப்ரோசன்' திரைப்படத்தில் எல்சா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்சா தன் இளைய சகோதரி அன்னா மீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரி மீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்சா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்" என்றார்.